டெல்லியில் தேசிய இளையோர் திருவிழா: தமிழ் இளைஞர்களுடன் எல். முருகன் சந்திப்பு...!
National Youth Festival Delhi L Murugan meets Tamil youth
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் சக்தியைக் கொண்ட இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் பொறுப்பு இளைய தலைமுறையிடமே உள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தேசிய இளையோர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை முன்னெடுத்துள்ள ‘வளர்ச்சியடைந்த பாரதத்தில் இளைய தலைவர்கள்’ என்ற கருத்தாக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்–நிக்கோபார் தீவுகளில் இருந்து வந்த இளைஞர்களை தமது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பில், தமிழ் மரபுக் கலை நிகழ்ச்சிகள், கருத்துப் பகிர்வு மற்றும் இளைஞர்களுடன் இணைந்து இரவு உணவு விருந்து ஆகியவை இடம்பெற்றதாகவும், இந்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
National Youth Festival Delhi L Murugan meets Tamil youth