பாஜகவின் U-turn... எம்.ஜி.ஆர், ஜெ.ஜெவை புகழ்ந்து தள்ளிய‌ நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு இருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். தனி விமான மூலம் கோவை சூலூர் விமானப்படைத்தளத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தடைந்தார். 

திறந்த வெளி வாகனத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள் புத்திசாலிகள். 

மத்தியில் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 3:30 கோடி ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறோம். 

தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது வரும் 2024 ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்ஜிஆர் ஏழைகளுக்கு செய்த உதவியாள் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்ஜிஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை அவருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே" என அதிமுக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசி உள்ளார்.

இந்நிலையில் திராவிட அரசியலுக்கு மாற்றாக பாஜகவை வளர்ப்பதாக அண்ணாமலை கூறி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோ தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகவும் அதனால் அவர்களின் கொள்கையில் பயணிப்போம் என்ன பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi praised AIADMK leaders mgr Jayalalithaa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->