தமிழகத்தில் உள்ள ராட்சசர்களை அழிக்க வந்த கட்சி பாஜக! அமைச்சர் துரைமுருகனுக்கு பதிலளித்த தந்த நாராயணன் திருப்பதி! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து வேலூர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காட்பாடி லத்தேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சரமான துறைமுருகன் தொண்டர்களிடையே பேசினார். 

அந்த கூட்டத்தில் பேசிய அவர் "வரும் டிசம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். கட்சிக்காக யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களை பூத் கமிட்டியில் போடுங்கள். இதுவரை நம்முடைய அரசியல் எதிரியாக அதிமுக இருந்து வந்த நிலையில் தற்போது நாம் ஒரு ராட்சசனை பார்க்க போகிறோம். பாஜக பிசாசு போன்று உருவெடுத்து வந்து கொண்டிருக்கிறது" என பேசி இருந்தார்.

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் கருத்திற்கு தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சேலத்தில் பாஜக ஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் "பாஜகவை ராட்சசன் போல் வளர்ந்து வருவதாக துரைமுருகன் சொல்கிறார். ராட்சசன் போல வளர்ந்து வரவில்லை ராட்சசர்களை அழிக்க பாஜக வளர்ந்து வருகிறது. 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு திமுகவினர் நடுநடுங்கி போயிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் ஏற்படும் ஊழல்கள், முறைகேடுகள், லஞ்சங்களை தமிழக பாஜக வெளி கொண்டு வருகிறது. அதன் காரணமாகத்தான் துரைமுருகனின் இத்தகைய பேச்சின் வெளிப்பாடு என நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narayanan Tirupati reply to Duraimurugan comment on BJP


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->