நீதிமன்றத்தின் தீர்ப்பு குட்டு அல்ல, சம்மட்டி அடி.. பாஜக நிர்வாகி ட்விட்.!! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மீது மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது. 

செந்தில் பாலாஜி கைது செய்வதற்கான காரணத்தை கூறவில்லை என சொல்வது அப்பட்டமான பொய். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுகிறேன்.

சட்டத்திற்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் விசாரணையின் போது நிரபராதி என்பதை நிரூபிக்க உரிமை உண்டு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை முறியடிக்க எந்த உரிமையும் இல்லை.

சட்டப்படி முதல் 15 நாள் காவலில் எடுத்து விசாரி தெரிவிக்க வேண்டும். ஆனால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சாகதமாக இல்லாததால் காவலில் எடுக்க முடியவில்லை என அமலாக்க துறை தெரிவித்துள்ளது. 

எனவே மருத்துவமனையில் இருக்கும் காலத்தை நீதிமன்ற காவலாக கருத முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "இடி விழுந்தது செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல. திமுகவுக்கும் தான். இது நீதிமன்றத்தின் குட்டு அல்ல, சம்மட்டி அடி" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanan thirupathy criticized dmk and SenthilBalaji


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->