ஜஸ்ட் மிஸ்., இல்லை பாஜக தான் மேயர்.! பாஜக மேயர் வேட்பாளருக்கு வாக்களித்த திமுக.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் மாநகராட்சி : 52 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 24 இடங்களிளும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிளும், மதிமுக 1 இடம் என்று மொத்தமாக திமுக கூட்டணியில் 32 இடங்களை கைப்பற்றியது.

தனித்து களமிறங்கிய பாஜக 11 இடங்களிளும், அ.தி.மு.க 7 இடங்களிளும், சுயேச்சை 2 இடங்களிளும் வெற்றிபெற்றனர். பாஜகவுடன் அதிமுக, சுயேச்சைகளுடன் பார்த்தால் 20 இடங்கள் இருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மேயர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் மகேஷ் 28 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதே சமயத்தில், பாஜக மேயர் வேட்பாளர் மீனாதேவ்  24 வாக்குகள் பெற்று திமுகவை அதிரவைத்துள்ளார். எப்படி பார்த்தாலும் அந்த 4 வாக்குகள் திமுக + கூட்டணியிடம் இருந்தான் வந்து இருக்க வேண்டும். 

எப்படியோ ஜஸ்ட் மிஸ் என்று திமுக வெற்றியை கொண்டாட., பாஜகவோ ஆதரவளித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று வாழ்த்து கூறி கொண்டு இருக்கிறது.

செய்தி சுருக்கம் : நாகர்கோவில் மாநகராட்சி மொத்தம்- 52 வார்டு.

திமுக+கூட்டணி - 32
பாஜக - 11
அதிமுக - 7
சுயேச்சை - ௨

தேர்தல் முடிவு :

திமுக  - 28 வாக்குகள் (வெற்றி)
பாஜக - 24 வாக்குகள் (தோல்வி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NAKARKOVIL Mayor election Result


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->