நான் சிரிப்பதை பார்க்க ரசிகர்கள் வரவில்லை..வெற்றி பெறுவதைப் பார்க்க வருகிறார்கள் - கவுதம் கம்பீர்!! 
                                    
                                    
                                   Fans not coming my laughing win the match
 
                                 
                               
                                
                                      
                                            17வது ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நீர் சுற்றி போட்டிகள் நிறைவடைந்து, கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணி மற்றும் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்தநிலையில் முதல் தகுதி சுற்று போட்டியில் ஸ்யர்ஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் பேட் கம்மிங் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதி சுற்று போட்டிக்கு சென்று விடும். தோற்கு மணி இரண்டாம் தகுதி சுற்றில் எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியோடு விளையாடும்.

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் ஆலோசகரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், நான் சிரிப்பதில்லை எப்போதும் முறைக்பாக இருக்கிறேன் என்று பலர் கூறுகின்றனர்.
 நான் சிரிப்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் வரவில்லை, வெல்வதை பார்ப்பதற்கு வருகிறார்கள். நான் பொழுதுபோக்கு துறையில் உள்ள பாலிவுட் நடிகர் கிடையாது.கிரிக்கெட் துறையில் இருக்கும் நான் விதிகளுக்கு கட்டுப்பட்டு என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வெற்றியுடன் டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Fans not coming my laughing win the match