ஒடிசா மாணவர் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் வெற்றிப்பெற்ற ABVP; நயினார் நாகேந்திரன் வாழ்த்து..!
Nainar Nagendran congratulates the ABVP on its resounding victory in the Odisha student union elections
ஒடிசா மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள ABVP-க்கு தமிழக பாஜக தலைவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;
ஒடிசா மாணவர் பேரவைத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற ABVP-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
''08 ஆண்டுகளுக்குப் பிறகு ஒடிசாவில் மீண்டும் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் பேரவைத் தேர்தலில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இமாலய வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அறிவிக்கப்பட்ட 13 பல்கலைக்கழகங்களில் 8 இடங்களையும், 342 கல்லூரிகளில் 208 இடங்களையும் கைப்பற்றி ஒடிசா மாணவர் மன்றங்களில் ABVP தனிப்பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI ஒரு பல்கலைக்கழகத்தைக் கூட வெல்ல முடியாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது
இன்றைய இளைய தலைமுறை (Gen Z) மாண்புமிகு பிரதமர் திரு.
நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலும், தேசத்தின் வளர்ச்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டிய அனைத்து ABVP தோழர்களுக்கும், ஆதரவளித்த மாணவச் செல்வங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran congratulates the ABVP on its resounding victory in the Odisha student union elections