#தமிழகம் || வீடு புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்துள்ள புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கரசி. இவர் வலை கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். 

சம்பவம் நடந்த நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாணிக்கரசி மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவின் பின்புறம் ஒரு ஆண் மறைந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மாணிக்கரசி சத்தம் போடவே, அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணிக்கரசியை வெட்டி உள்ளார்.

மேலும், அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடல் முழுக்க ரத்த காயங்களுடன் துடிதுடிக்க அந்தப் பெண்ணை பாலியல் கொடுமை செய்துள்ளான் அந்தக் கொடூரன். 

மனைவியின் கதறல் சத்தம் கேட்டு கணவன் வரவே, அதற்குள் அந்த கொடூரன் வீட்டின் பின்புறமாக தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

முதல்கட்ட விசாரணையில், இந்த கொடூரத்தை நிகழ்த்தியது புத்தேரிக்கு அடுத்துள்ள ஆனப்பொற்றை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து 'அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல், பெண்ணை தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் சாதாரணமான அடி தடி வழக்கு போன்றுவடசேரி போலீசார் பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு, பலாத்காரம், கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கறிஞர் சிவாஜி என்பவர், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்தை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்தக்கொடூரன் சந்தோஷ் மீது ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 வழக்குகள், பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில்  ஈடுபட்ட வழக்கு என 6 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் ஒரு வழக்கில் கைதாகி  விடுதலையாகியுள்ளான் வேண்டும் அந்த பகுதியில் சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagarkovil puththeri woman harassment case


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal