ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் திமுகவை திட்டி யாரும் எழுதக்கூடாது...!!! - வைகோ
my name not Rajya Sabha list no one should write against DMK Vaiko
மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ,'ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம்' என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக வைகோ:
இதுகுறித்து வைகோ அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, " ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது.
ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.
அதன்படி, 2026 தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏக்களை மதிமுகவிலிருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
my name not Rajya Sabha list no one should write against DMK Vaiko