அகிலேஷ் யாதவ் கட்சியை செதில் செதிலாக உடைத்து எடுக்கும் பாஜக.! அடிமேல் அடி வாங்கும் அகிலேஷ் யாதவ்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் - சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமமாநில திடீர் திருப்பமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக.,வில் இணைந்துள்ளார். அபர்னாயாதவ் பாஜகவில் இணைந்து இருப்பது, சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அடியாக இருக்கும் என்று அம்மாநில அரசியல் கள நிலவரம் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முலாயம் சிங் யாதவின் மருமகனும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரமோத் குப்தா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து இருப்பது, சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MulayamSinghYadavsson also join to BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->