விஜயின் முயற்சிகள் நல்லதாக அமையட்டும் - வைகோ வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது;- "ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைப் போல், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யை பின்பற்றி வரக்கூடிய ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவரும் தமிழ்நாட்டிற்கு சில நல்ல காரியங்களை செய்து வந்துள்ளார். இப்போது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். 

இது குறித்து கட்சி ஆரம்பிக்கும் சமயத்திலேயே நான் வேறு எதுவும் சொல்லக்கூடாது. அவரது முயற்சிகள் தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mtmk leader vaiko speech about actor vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->