கூட்டத்தொடர் முடிந்து., முக ஸ்டாலின் அளித்த பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எம் எல் ஏக்களும் முக கவசம் அணிந்து இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளனர்.

பேரவை கூட்டம் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவர்களுக்கும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை, சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், "நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தேன். 2 நாட்கள் போதாது என்று எதிர்க்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் உயிரிழப்பு குறித்து விவாதிக்க வேண்டும்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin press meet about neet dead


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->