முக்கிய புள்ளியை சந்திக்கப்போகும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 12 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர் என் ரவியை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்துப் பேசவுள்ளார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சந்திப்பின்போது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தருவது குறித்து முதலமைச்சர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. 

மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk stalin meet governor rn ravi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->