போராடுபவர்கள் எந்த அமைப்பு என்று தெரியவில்லை - செவிலியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அதிர்ச்சி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,

" தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 8 செவிலியர் சங்கம் உள்ளது. யார் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை" என்ற ஒரு அதிர்ச்சி தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், செவிலியர்கள் யாரும் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ministers shocking interview on nurses protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->