''டாஸ்மாக் பிரச்சினைக்கு திமுக, அதிமுக தான் காரணம்''; அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


தவெகவின் கோவை மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, பேரூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் கே.விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வினை அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது;

புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், முதல்வர் விஜய் ஆட்சியில் வரம் வாங்கிக் கொண்டு பிறக்கும் குழந்தைகள். அவர்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் கடைகளை திறக்க ஆரம்பித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

பணிக்கு வராத ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. தவறு யார் செய்தாலும் தவறுதான் என்று குறிப்பிட்டதோடு, அரசு தவறு செய்தாலும், அமைச்சர் தவறு செய்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலேயும், டாஸ்மாக் பிரச்சினைக்கு திமுக, அதிமுக தான் காரணம் என்றும், இன்றைக்கு டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற நிலை ஏற்பட்டதற்கு திமுகவும் அதிமுகவும் தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். அதாவது, கடந்த காலங்களில் இந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது இவ்வளவு தூரம் வந்திருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஓர் உதாரணம் தான். இதுபோன்று பல்வேறு துறைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் பிரச்சினை என்பது 200 படிகள் கொண்டது என்றும், அதில் நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளையும் ஏறி, டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vignesh accuses DMK and AIADMK of being responsible for the TASMAC issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->