'சூப்பர் ஸ்டாருடன் சூப்பர் சந்திப்பு'...! நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வன்னி அரசு...!
Minister Vanniyarasu met actor Rajinikanth
சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அமைச்சர் வன்னியரசு, அவரது வாழ்த்துகளைப் பெற்ற மகிழ்ச்சியை எக்ஸ் தளத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

இதுகுறித்து வன்னியரசு தனது எக்ஸ் தளப் பதிவில், “திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தற்போது அதற்கான வாய்ப்பு அமைந்தது.
‘நிறைய மக்களுக்கு நல்லது செய்யுங்கள்... வாழ்த்துகள்’ என்று மனமார வாழ்த்தி வழியனுப்பினார். அவரது அன்பான வார்த்தைகள் மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட ஊக்கமளித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
அடுத்ததாக ‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இணையும் புதிய திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனது வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்துள்ள சுயசரிதை நூலையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Minister Vanniyarasu met actor Rajinikanth