திமுக மேயர் vs திமுக கவுன்சிலர்கள் மோதல் விவகாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பஞ்சாயத்து!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை. 

நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கடி உயர்த்தினர். மாமன்றத்திலேயே மோதல் போக்கு நீடித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பிரச்சனைகள் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

அதேபோன்று கடந்த மாதம் நடைபெற வேண்டிய மாமன்ற கூட்டமும் நடைபெறாமல் போனது. இதற்கிடையே மேயரை மாற்ற கோரி 40-க்கும் மேற்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விடுதியில் விசாரணை நடைபெற்றது. 

இந்த விசாரணையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான், முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர் வகாப், நெல்லை மாநகராட்சியின் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, 4 மண்டல சேர்மேன்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். 

இவர்கள் அனைவரையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டார். அதேபோன்று நாளை நெல்லை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Thangam Thennarasu led discussion on Nellie mayor matter


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->