தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை ரூ. 2000 வழங்கும் தேதியை அறிவித்த உணவுத்துறை அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக .மு.க.ஸ்டாலின்‌ பதவியேற்றவுடன்‌. நேற்று (07.05.2020) காலை தலைமைச்‌ செயலகத்திற்கு சென்றார். அவரை முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்றவுடன்‌ முதலமைச்சர்‌ முக ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளைப்‌ பிறப்பித்தார்.

அதன்படி, கொரோனா அச்சுறுத்தல்‌ தற்போது உயர்ந்து வரும்‌ நிலையில்‌, மக்களின்‌ இன்னல்கள்‌ தொடர்வதால்‌ தமிழக மக்களின்‌ துன்பங்களைப்‌ போக்குவதற்கும்‌, வாழ்வாதாரத்திற்கு உதவும்‌ வகையிலும்‌, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள்‌ அனைத்திற்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ வகையில்‌ 4,000 ரூபாய்‌ வழங்கப்படும்‌ என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ பொருட்டு, சுமார்‌ 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய்‌ செலவில்‌ 2,000 ரூபாய்‌ வீதம்‌ நிவாரண தொகை முதல்‌ தவணையாக மே மாதத்திலேயே வழங்கும்‌ ஆணையில்‌ முதலமைச்சர்‌ முக ஸ்டாலின் நேற்று கையொப்பமிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை ரூ. 2000  வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வரும் 10 ஆம் தேதி முதல்கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை ரூ. 2000  வழங்கப்படும்.

வருகின்ற 10ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sakkarapani press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->