செம்மண் அள்ளிய வழக்கத்தில் திமுக அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி., நீதிமன்றத்தில் ஆஜர்.! - Seithipunal
Seithipunal


முறைகேடாக செம்மண் அள்ளிய வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு முறைகேடாக செம்மண் அள்ளியது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் மீது புகார் எழுந்தது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரிகளில் செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் செம்மண் எடுக்க திமுக அமைச்சர் பொன்முடியின் உறவினர்கள் அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொன்மொடி குடும்பத்தினர் அங்கு செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சுமார் 30 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதை அரசு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்திருந்தனர். இதில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட சிலரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், இன்று இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ponmudi in vilupuram court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->