இரட்டை வேடம் போடும் மு.க. ஸ்டாலின்.! தமிழகத்தில் போராட்டம்.. கூட்டணியில் மெளனம்.!! - Seithipunal
Seithipunal


பால் விலையை  உயர்த்தவேண்டும் என்று பால் உற்பத்தியாளர்களை பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்தார். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, ஆவின் பால் விலையை உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை, 28 ரூபாயில் இருந்து  32 ரூபையாக அதிகரித்தது, எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபையாக நிர்ணயிக்கப்பட்டதால் ஆவின் பால் விற்பனை விலை ஆறு ரூபாய் வரை உயர்ந்தது. 

இந்தபால் விலையை உயர்த்தியதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். பால் விலைக்கு எதிராக தமிழத்தில் திமுகவினர் பல இடங்களில் போராட்டமும் நடத்தினர். 

இந்நிலையில் புதுவையில் நேற்று பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். புதுவையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவே, பால்விலை உயர்தப்பதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 

தமிழகத்தில் பால் விலை உயர்வதற்கு என்ன காரணமே அதே காரணத்தை புதுவை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த முக ஸ்டாலின், புதுவை அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

milk price per litre rs 6 in pondicherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->