தொகுதி பக்கமே போக முடியல.. "முதல்வரிடம் சொல்லிட்டு ராஜினாமா செய்றேன்".. மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.!!

மதுரை மாநகராட்சியின் 19வது மாநகர கூட்டம் திமுக மேயர் இந்திராணி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. மாமன்ற கூட்டம் தொடங்கியது முதல் துணை மேயர் உட்பட அனைத்து திமுக மாமன்ற உறுப்பினர்களும், மண்டல தலைவர்களும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எழுந்து கூறியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

அந்த சமயத்தில் திடீரென மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்குள் நுழைந்த மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் பேச அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது பேசியவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பல வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கூட்டங்களில் பேசியும் நடவடிக்கை எடுக்காததால் தொகுதிப் பக்கம் செல்லும் பொழுது பொதுமக்கள் முற்றுகையிடுகின்றனர்.

இதனால் தொகுதி பக்கமே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சென்று வலியுறுத்த உள்ளேன். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த பதவிக்கு வந்துள்ளேன். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்ற மனநிலையில் தற்போது உள்ளேன் என மன வேதனையுடன் பேசி இருப்பது மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறினார்.

தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரச்சனைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தொகுதி பக்கம் செல்ல முடியவில்லை. இதனால் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும கட்சியின் கூட்டணியில் இருக்கும் எம்எல்ஏவுக்கே இந்த நிலை என்றால் எவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலை திமுக எதிர்கொள்ளும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK MLA Bhoominathan is going to resign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->