#Breaking: திமுக - மதிமுக கூட்டணி இழுபறி.. மதிமுக பொதுச்செயலாளர் பரபரப்பு பேட்டி.! 
                                    
                                    
                                   MDMK and DMK Alliance Struggle due to MDMK Decision Stands 
 
                                 
                               
                                
                                      
                                            மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, விசிகவுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை அழைப்பு விடுத்து இருந்தது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தற்போது வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதனால் இ.யூ.மு.லீ மற்றும் ம.ம.க கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து மதிமுக மற்றும் விசிக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திமுக - மதிமுக இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடரும். 
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் " என்று தெரிவித்தார். இதனால் திமுக- மதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       MDMK and DMK Alliance Struggle due to MDMK Decision Stands