'வைகோ தவெகவிற்கு தாவ பெட்டி படுக்கையெல்லாம் கட்டி தயாராக உள்ளார்'; மல்லை சத்யா..! - Seithipunal
Seithipunal


மல்லை சத்யா இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மதிமுக வைகோ தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி தயாராக உள்ளதாக அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் போட்டி என சொன்னார். அங்கு அல்லு சில்லுகளுக்கு இடமில்லை என சொன்னார், அதில் மதிமுகவும் இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்று கூறியுலாளர்.

இதுவரை காலம் திமுகவின் தயவால்தான் வைகோ நாடாளுமன்றத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றினார் என்றும், 24 ஆண்டு காலம் மாநிலங்களவையிலும், 05 ஆண்டு காலம் மக்களவையிலும் அவர் பணியாற்றினார் என்றால், திமுகதான் அந்த வாய்ப்பை பெற்று தந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வைகோவின் மகன் இன்று திருச்சியில் மக்களவை உறுப்பினராக இருக்கிறார் என்றால், அதற்கும் திமுக தான் காரணம் என்றும், சின்னப்பிள்ளை போன்று வைகோ பேசுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என விசிக சொன்னது. அதேப்போன்று இடதுசாரிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். உரிய தொகுதிகள் கிடைக்காததால், சுய மரியாதையோடு வெளியே நிற்கிறோம் என மக்கள் நீதி மய்யம் சொன்னது.

ஆனால், சுயமரியாதை பற்றி வாய் கிழிய பேசும் வைகோ ஏன் அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என அவர்தான் சொல்லவேண்டும். அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என சொல்ல வேண்டும் என விமசித்துள்ளார்.

இப்போது திமுக வெற்றி பெற்றிருந்தால், வைகோ என்ன பேச்சு பேசுவார் என எங்களுக்குத் தெரியும் என்றும், கடந்த 05 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல வாய்ப்புகளை பெற்று அவர் பயனடைந்தார் என்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று திமுக ஆட்சியில் இல்லை என்பதால், அவதூறு பரப்புவதும், சேற்றை வாரி பூசுவதும், தவெகவை திராவிட வெற்றிக் கழகமாக நாங்கள் பார்க்கிறோம் என துரை வைகோ பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என மல்லை சத்யா காட்டமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mallai Sathya claims that Vaiko has packed up all his belongings and is ready to defect to the TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->