பதற்றம்: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!
madurai sanitary workers protest police arrested
மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை மற்றும் தீபாவளி போனஸை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடங்கியதை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பணியாளர்களுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், இரு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் எந்த முடிவும் எட்டாமல் தோல்வியில் முடிந்தன. இதனால், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.
சூழ்நிலை பரபரப்பாக மாறிய நிலையில், அப்பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர் இரவு ஒன்பது மணியளவில் திடீரென போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
madurai sanitary workers protest police arrested