மதுரை : ஹிஜாப் அணிந்துவந்த வாக்காளரால் பரபரப்பு., வெளியேற்றப்பட்ட பாஜக முகவர்.! - Seithipunal
Seithipunal


மேலூர் நகராட்சியில் எட்டாவது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒரு பெண் முகவர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் : மேலூர் நகராட்சி எட்டாவது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடியில் காந்திஜி பூங்கா ரோடு பகுதியை சேர்ந்த மக்களும், பார்கி தெருவை சேர்ந்த மக்களும், பெரியகருப்பன் காலனி பகுதியை சேர்ந்த மக்களும் வாக்களித்து வருகின்றனர்

இந்த வார்டை பொருத்தவரை பாஜக, தேமுதிக, திமுக, அதிமுக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நடைபெற்றுவந்த நிலையில், பாஜக முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்த வெளியான தகவலின்படி, ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளர் ஒருவருக்கும், பாஜக முகவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பாஜக முகவரிக்கு எதிராக மற்ற கட்சி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஒரு பெண் முகவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுவருகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI MELUR ELECTION BOOTH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->