மதுரை அமமுக கூடாரம் மொத்தமா காலி.!! தட்டி தூக்கிய ஈபிஎஸ்!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் இல்லத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி உதயகுமார் முன்னிலையில் அமமுக அமைப்பு செயலாளர் உசிலம்பட்டி ஐ.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

அதேபோன்று அமமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.மகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குரு.பாலமுருகன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும், சித்துபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான இ.பி.வி.ஜெயராமன், உசிலம்பட்டி நகர செயலாளர் பி.குணசேகர பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோன்று அமமுக உசிலம்பட்டி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமான மலேசியா ஆர்.பாண்டியன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் சி.நரசிங்க பெருமாள், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.விருமப்பராஜன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம். அஜிம் பாஷா, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான வி.பிரகதீஸ்வரன், நகர அம்மா பேரவை தொழிற்சங்க இணை செயலாளர் எஸ்.பால்பாண்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai district AMMK officials joined AIADMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->