10 அடி குழித்தோண்டி புதைக்கப்படுவீர்கள்.! முதலமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனே மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். இல்லை என்றால் குழிதோண்டிப் புதைக்கப்படுவீர்கள் என்று, அம்மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கையை, "மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மாநிலத்தை விட்டு உடனே வெளியேற வில்லை என்றால், பத்து அடி குழி தோண்டி புதைக்கப்படுவீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் நல்லாட்சி தினவிழா கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, "மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனே மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், 10 அடி குழி தோண்டி புதைக்கப்படுவீர்கள். நீங்கள் இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விடும்." என்று எச்சரிக்கை விடும் தோணியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh cm shivraj singh khan warning speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal