எல்லைகளை உடைக்கும் இலக்கியம்...! சென்னை புத்தகத் திருவிழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!
Literature that breaks boundaries Chief Minister important announcement Chennai Book Fair
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்துள்ளார்.“இலக்கியம் என்பது எல்லைகளை தாண்டி மனிதர்களை இணைக்கும் பாலம்” என்பதற்கு சாட்சியாக விளங்கும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் அரசியல் தலையீடுகளும் குறுகிய பார்வையும் காரணமாக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கு வலுவான எதிர்வினையாக,இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இனி தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும் எனப் பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்துக்கே உரிய முற்போக்கு விமர்சன பார்வையுடன் வாசிப்பை அரசின் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுத்து வரும் திராவிட மாடல் அரசின் முயற்சிகளைப் பாராட்டியதோடு,சர்வதேச புக்கர் பரிசு (International Booker Prize) வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு தனது மனமார்ந்த நன்றியையும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Literature that breaks boundaries Chief Minister important announcement Chennai Book Fair