'கெஞ்சி கையேந்திப் பெற்ற ஆதரவு'...! - முதலமைச்சர் விஜய்யை ஒற்றை வரியில் அசிங்கப்படுத்திய டிடிவி தினகரன்...!
Kenji got support by hand TTV Dhinakaran insulted Chief Minister Vijay single line
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், தற்போதைய ஆட்சியை அமைப்பதற்காக தவெக தலைவர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடி ஆட்சி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மக்களால் வழங்கப்பட்டுள்ள தொகுதி எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்றும், வெறும் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் காட்சிப்படுத்தல்களால் நிர்வாகத்தை நடத்த முடியாது என்றும் விமர்சித்தார்.சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள சூழலை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சரியான திசையில் இல்லை என்பதை மக்கள் நன்கு உணர்ந்து வருவதாக கூறிய அவர், மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிவித்தார்.“மாற்றம் வேண்டும்” என்ற எண்ணத்தில் மக்கள் புதிய ஆட்சியை தேர்வு செய்திருந்தாலும், அதன் விளைவுகளை தற்போது அனுபவித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒரு அரசாங்கம் கால அவகாசம் கேட்பது இயல்பானது. ஆனால் சட்டம்-ஒழுங்கு போன்ற அடிப்படை நிர்வாக பொறுப்புகளை சீரமைப்பதற்கு அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மக்களுடன் களத்தில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒரு தவறை திருத்துவதற்குப் பதிலாக தொடர்ந்து புதிய தவறுகளை மேற்கொண்டு வருவதாக தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Kenji got support by hand TTV Dhinakaran insulted Chief Minister Vijay single line