கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளான கயல்விழி அழகிரி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற முக்கிய இணைப்பு நிகழ்வில் அவர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது நடைபெறாதது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி விஜயதாரணி உள்ளிட்டோர் அண்மையில் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் கயல்விழி அழகிரியும் இணைவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் கட்சியில் இணையாதது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது ஆதரவாளர் வட்டாரங்களின் தகவலின்படி, கடந்த சில மாதங்களாக கயல்விழி அழகிரி தவெக தலைமையுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்றதும், பின்னர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இதன் பின்னணியில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான தவெக வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கயல்விழி அழகிரி முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் அழகிரி குடும்பத்திற்கு இன்னும் அரசியல் செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் நிலையில், அந்த ஆதரவை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தவெக தலைமையோ எந்த பதவிக்கும் முன்கூட்டியே உத்தரவாதம் வழங்கும் நிலைப்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு அப்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சியின் வளர்ச்சி மற்றும் அமைப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும் என்ற அணுகுமுறையையே கட்சி பின்பற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, கயல்விழி அழகிரி எதிர்பார்த்த உறுதிமொழி இதுவரை கிடைக்கவில்லை என்றும், அதுவே அவர் தவெகவில் இணையாததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கயல்விழி அழகிரிக்கும் தவெக தலைமையுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடங்கிவிடவில்லை என்றும், இருதரப்பிலும் தொடர்பு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கயல்விழி அழகிரி தவெகவில் இணைவது, மேயர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தவெக தலைமையோ அல்லது கயல்விழி அழகிரி தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kayalvizhi Alagiri backed out at the last minute Why hasnot she joined TVK yet Details revealed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->