முதலமைச்சர் மீது பழிசுமத்தி பேசுவதா? விஜய்க்கு திருமாவளவன் கண்டனம்!
Karur Stampede TVK vijay VCK Thirumavalavan
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிந்தைய சூழலில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில், “அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் உரையாற்றினோம், எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. பழிவாங்க நினைத்தால் என்னை குறிவைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:
கரூர் பெருந்துயரத்தில் 41 பேர் பலியான நிலையிலும் விஜய் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. பத்துக்கும் மேற்பட்ட மணி நேரம் காத்திருந்து, கடும் நெரிசலில் சிக்கி தற்காத்துக்கொள்ள முடியாமல் உயிரிழந்த மக்களின் துயரத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த சோகம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பின்மையின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவு நேரத்திலேயே கரூருக்கு சென்று மக்கள் பக்கம் நின்று ஆறுதல் கூறினார். ஆனால் விஜய், தனது வீடியோவில் முதலமைச்சர் மீது பழிசுமத்தி பேசுவது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
விஜய் அரசியல் ஆதாயத்திற்காக உயிரிழப்புகளை பயன்படுத்துகிறார். சங்பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதை அவரது வீடியோ வெளிப்படுத்துகிறது. தமிழக மக்கள் இப்படிப்பட்ட சதிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பா.ஜ.க. தமிழ்நாட்டை குறிவைத்து விளையாடும் அரசியலின் கருவியாகவே விஜய் மாறியுள்ளார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
Karur Stampede TVK vijay VCK Thirumavalavan