கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!
Karur Stampede TN Govt TVK Vijay Sc order
கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும், அந்த குழுவில் தமிழ்நாட்டுப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான விசாரணையில், சென்னை உயர் நீதிமன்றம் தவெக தலைவர் விஜயின் தலைமைப்பண்பை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தது. அதனை எதிர்த்து, விஜய் தரப்பில் அந்தக் கருத்தை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, சிபிஐ விசாரணைதான் உண்மையை வெளிக்கொணரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. அதேசமயம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.
English Summary
Karur Stampede TN Govt TVK Vijay Sc order