மாதம் ரூ. 2,000, 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து! - அசத்தலான கர்நாடகா காங். தேர்தல் அறிக்கை வெளியீடு! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரசின் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற 10-ந்தேதி கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 8 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆறு முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள நிலையில், சற்றுமுன் தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு :

* குடும்ப  தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000
* வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
* வரி வசூலில் கர்நாடகா பங்கு வலியுறுத்துவோம்- காங். தேர்தல் அறிக்கை
* பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் 
* ரேஷன் கடையில் 10 கிலோ இலவச உணவு பொருட்கள் இலவசம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன .

முன்னதாக ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில்,

* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், 
* இலவச பால், 
* ரேஷன் கடைகளில் ஐந்து கிலோ சிறுதானியங்கள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Elections 2023 Congress manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->