இஸ்லாம் - இந்து மாணவர்களின் சீருடை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் சீருடை குறித்த அரசின் உத்தரவுகளை பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து வருவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மறுப்பதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை இடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் தெரிவிக்கையில், தனி மனித உரிமைகள் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் சீருடை குறித்த அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "சீருடை குறித்த அரசின் உத்தரவுகளை பள்ளி நிர்வாகங்கள், கல்லூரி நிர்வாகங்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் இந்த சீருடை விவகாரத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்" என்றும் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA CM SAY ABOUT UNIFORM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->