கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்?! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் இன்னும் 7 மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சிப் பொறுப்புக்கள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே கடந்த மாதம் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் காலமானதை அடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, "கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari by ellection announce info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->