டபுள் டாய்லெட் | முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்த அரசு கட்டிடத்தில் கொடுமை கூத்து! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் : பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட சிப்காட் தொழில் பூங்காவின் திட்ட அலுவலகத்தில் கட்டிடத்தின் ஒரு அறையில் இரண்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.

ஒரு கோடியே என்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த திட்ட அலுவலகத்தை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை முன்னிலையில் இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்ட அலுவலகத்தில் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் (வெஸ்டர்ன் டாய்லெட்) கட்டப்பட்டிருப்பது நெட்டிசன்களால்  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் இரண்டு கழிவறை இருந்ததற்கு, இதுதான் திராவிட மாடலா என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் திறந்து வைத்த கட்டிடத்தில் ஒரே அறையில் 2 டாய்லெட்டுகள் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kANJIPURAM SIPCOT TOILET


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->