கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கு உத்தரவிட முடியாது.! கைவிரித்த உயர்நீதிமன்ற கிளை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து உள்ளது.

இது இந்தியாவின் இரண்டாவது அலை என்று சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் நாளொன்றுக்கு 2.70 லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உச்சபட்சமாக நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்க்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்தே தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடத்த அனுமதி அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, "கொரோனா   மிகத் தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப் படுத்தலாம். இந்த நேரத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallazhagar function issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->