டெல்லியில் மிரட்டப்பட்ட திமுக எம்பி.! அதிரடியாக எழுந்த பரபரப்பு புகார்.!  - Seithipunal
Seithipunal


திமுக எம்பி மக்களவையில் சபாநாயகரிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "தாங்கள் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சிலர் என்னை மிரட்டி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் என்ன நிலைப்பாடுகளை எடுக்க போகிறேன்? எந்தெந்த விவகாரம் குறித்து பேச போகிறேன் என்று என்னிடம் கேள்வி கேட்க முயற்சித்தனர். 

மேலும், தற்போதைய அரசியல் நிலவரம் தமிழகத்தில் எப்படி இருக்கிறது?" என்று விசாரித்ததாக தெரிவித்துள்ளார். மக்களவையின் புதிய எம்பி கதிர் ஆனந்த்தின் இந்த புகார் மக்களவையில் இருந்த பல்வேறு கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

மேலும், காங்கிரஸ் கட்சியினரும், நேற்று இரவு போராட்டம் நடத்த முயற்சி செய்த போது போலீசார் தங்களிடம் அத்துமீறும் முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா பாதிக்கப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadhir ananth complaint on parliament


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal