நெருங்கும் தேர்தல்: புதுச்சேரியில் ஜே.பி.நட்டாவின் ''ரோடு-ஷோ''!
JP Natta road show Puducherry
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க வேட்பாளராக நமச்சிவாயம், இந்திய கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் எம்.பி., அ.தி.மு.க சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுவதால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அது போல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டலின் கடந்த 7ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அக்காட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று மாலை 4 மணியளவில் விமான மூலம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.
பின்னர் மாலை 6 மணியளவில் அண்ணா சிலையிலிருந்து அஜந்தா சிக்னல் வரை ரோட் ஷோ சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளார்.
இதில் புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
JP Natta road show Puducherry