அதிர்ச்சி.! எம்.பி,ஜோதிமணி செய்த வேலை..! விரட்டியடித்த பொதுமக்கள்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.கோம்பை பகுதியில் சிப்கோ நிறுவனம் அமைய இருக்கின்றது. இதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், கரூர் எம்பி ஜோதிமணி தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அப்பகுதிக்கு சென்று போராட்டம் நடத்தி இருக்கின்றார். 

இந்த நிலையில் அப்பகுதியினர் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்துள்ளனர். இந்த நிறுவனம் வந்தால் இங்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். எனவே இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று மலர்வண்ணன் கூறி இருக்கின்றார். 

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் எங்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது போராட்டம் வேண்டாம் என்று அப்பகுதியினரும் கூறி இருக்கின்றனர். ஆனால் எதையும் காதில் வாங்காமல் ஜோதிமணி போராட்டத்திலேயே குறியாக இருந்தார்.

இதன் காரணமாக ஆவேசமடைந்த ஜோதி மணியை நோக்கி அப்பகுதியினர் சத்தம் போட்டபடியே ஓடிவந்தனர் உடனடியாக திமுகவினர் ஜோதி மணியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஜோதிமணி மக்களால் விரட்டியடிக்கப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jothimani protest in kombai


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal