தவெகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர்; யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?
John Arokiyasamy is the election strategist of the TVK credited with the partys resounding victory
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை தவெக 110 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக 63 தொகுதிகளில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் திமுக 61 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
கடந்த 29-ஆம் தேதி தேர்தலுக்கு பின்னரே வெளியான கருத்து கணிப்புகள் படி, பெரும்பான்மையான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணித்து இருந்தன. ஆனால், ''மை ஆக்சிஸ் இந்தியா' நிறுவனம் மட்டும் தவெக ஆட்சி பிடிக்கும் என கணித்திருந்தது. இந்த கணிப்பு பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உண்மையாகியுள்ளது. இப்படி தவெக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி முக்கிய நபராக செயல்பட்டுள்ளார்.
ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, திருச்சி ஜெயிண்ட் சோஜப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், லயோலோ கல்லூரியில் தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
படிப்பை முடித்தபிறகு Perfect Relations என்கிற நிறுவனத்தில் மேனேஜராக நான்கு ஆண்டுகளாகவும், Good Relations India என்கிற நிறுவனத்தின் இயக்குநராக 12 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், Persona Leadership Advisory Pvt Ltd என்கிற நிறுவனத்தை 2017-இல் சொந்தமாகத் தொடங்கி 2021 வரை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து JPACPersona என்ற நிறுவனத்தை தொடங்கிய ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் வியூக வகுப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றில் சிவசேனாவுக்கு ஆலோசகராக பணியாற்றினார். தொடர்ந்து 2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய முதல்வர் சித்தாரமையாவின் ஆலோசனைக் குழுவோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக 2016-இல் பாமகவுக்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி அந்தத் தேர்தலில் அன்புமணிக்கு முன்னேற்றம் கொடுத்தது. இதேபோல், 2021 தேர்தலில் 'இது மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி' எனும் முழக்கத்தை ஜான் ஆரோக்கியசாமி நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த 2026 தேர்தலில் தவெகவுக்கு வியூக வகுப்பாளராக பணியாற்றிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது.
English Summary
John Arokiyasamy is the election strategist of the TVK credited with the partys resounding victory