#ஜார்கண்ட்_இடைத்தேர்தல்: வெற்றி முகத்தில், பாஜக கூட்டணி.! அதள பாதாளத்தில், UPA வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைந்துள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. 

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் கஸ்பாபெத் மற்றும் சின்ச்வாட் உள்ளிட்ட 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஆனது நடந்து முடிந்தது. அதன்பின் பிப்ரவரி 27ஆம் தேதி மற்ற நான்கு மாநில சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நடந்தது.

இதில், ராம்கர் (ஜார்கண்ட்) தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடந்து வருகின்றன. காங்கிரஸின் மம்தா தேவியின் கணவர் பஜ்ரங் மஹ்தோவுக்கும், பாஜக ஆதரவு ஏஜேஎஸ்யூ வேட்பாளரும், எம்பியுமான சந்திரபிரகாஷ் சவுத்ரியின் மனைவி சுனிதா சவுத்ரிக்கும் இடையே இந்த தொகுதியில் முக்கியப் போட்டி நிலவுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை 405 வாக்குச்சாவடிகளில் 10 சுற்றுகளாக நடக்கவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் (பாஜக ஆதரவு) சுனிதா சவுத்ரி 25524 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். UPA வேட்பாளர் பஜ்ரங் மஹ்தோ 13735 வாக்குகளில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand ramgharh by election results 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->