விடாமுயற்சியில் ஜெகன் மோகன் ரெட்டி.! அதிரடி நடவடிக்கையால் கலக்கத்தில் இளைஞர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஆந்திராவில் தடை விதிக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் மற்றும் கேமிங் தளங்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.  

முன்னதாக இதுகுறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், 'ஆன்லைன் கேம் மற்றும் சூதாட்டம் நம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற செயல். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலமாக இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கின்றனர். 

ஆன்லைன் மூலமாக இந்த தவறுகள் நடக்கின்ற காரணத்தால், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. மாநில சட்டத்தின் கீழாக, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடனைடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். இணையதள நிறுவனங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jegan mogan reddy strong decision about gambling online


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->