அரசியலில் பெண்களின் சக்திக்கு அடையாளம் 'ஜெயலலிதா' ...! - தலைவிக்கு 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் - Seithipunal
Seithipunal


மக்களால் நான்… மக்களுக்காகவே நான்!" - அந்த கர்ஜனை குரலின் நினைவில் 9 ஆண்டுகள்: மறக்க முடியாத புரட்சித் தலைவி ஜெயலலிதா.பெண்கள் அரசியலில் முன்னேற முடியாது என்ற கருத்தை தகர்த்தெறிந்து, ஆண்கள் ஆதிக்கம் செய்த அரசியல் மேடையில் தன்னம்பிக்கையுடன் நின்று வெற்றியை கைப்பற்றிய பெண் புரட்சித் தலைவர் ஜெயலலிதா… அவர் மறைந்தது இன்று ஒன்பது ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. தொண்டர்களின் இதயத்தில் ‘அம்மா’ என்ற பாசப் பெயருடன் என்றும் நிலைத்து நிற்கிறார்.

திரைத்துறையின் உச்சத்தைத் தொட்ட அவர், 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த தருணம் முதல், அரசியலில் தடம் பதித்துப் புயல் போல எழுந்தார். பிரபல நடிகை என்பதைக் காரணமாகக் கொண்டே முதலாவது பொறுப்பாக கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பும் அவருக்கே.1987 இல் எம்.ஜி.ஆர் மறைந்ததும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி.

1989 சட்டசபைத் தேர்தலில் சேவல் சின்னத்துடன் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 இடங்களையும் கைப்பற்ற, ஜானகி அணிக்கு வெறும் ஒரு இடமே கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஜானகி அரசியலிலிருந்து விலகினார்; அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்ததும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவே ஒருமித்த முடிவாக கொண்டுவரப்பட்டார்.

1991, 2001, 2011, 2016 - நான்கு முறை தமிழக முதலமைச்சராக பதவியேற்று வரலாற்றில் தனது பெயரை பொற்கோலத்தில் பொறித்தவர். முதல் முறை பதவியேற்றபோது சம்பள காசோலையைத் தள்ளி, "மக்கள் நலத்திற்காக நான்’ என்ற உண்மையான அர்ப்பணிப்புடன், வெறும் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக ஏற்றவர்.அம்மா உணவகம், இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு 30% காவல் துறை ஒதுக்கீடு, ஏழைகளுக்கு விலையில்லா ஆடு-மாடு திட்டம், திருநங்கைகளுக்கு மாத ஊதியம் போன்ற மக்கள் நலச் சின்னங்களாக விளங்கிய திட்டங்கள் அவரது ஆட்சியின் அடையாளங்களாக இன்று வரை நினைவுகூரப்படுகின்றன.

ஜெயலலிதா என்ற பெயர் அவருக்கு பிறந்தபோது சூட்டப்படவில்லை. அவருடைய ஆரம்பப் பெயர் கோமளவள்ளி. பள்ளி தோழிகள் ஜெயா, ஜெய், லில்லி என்று அழைத்தாலும், அம்மா அவரை “அம்மு” என்று அழைத்தார். ஆனால் மில்லியன் கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டும் அவரை "அம்மா" என்ற பெயரால் இதயப்பூர்வமாக கொண்டார்கள்.

மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, பின்னர் சர்ச் பார்க், அங்கிருந்து தொடங்கி, 115 திரைப்படங்கள், எம்.ஜி.ஆருடன் நடித்த 28 படங்கள், பின்னர் அரசியலில் அபார வெற்றி… இந்தப் பயணம் ஒரு பெண்ணின் சாதனையின் வல்லரசு.2016 செப்டம்பர் 22 அன்று உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்கள் மருத்துவர்களின் முழுநேர சிகிச்சையிலும், டிசம்பர் 5 அன்று உலகை விட்டு பிரிந்தார்.

"எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. இயங்கும்" என அவர் உற்சாகத்துடன் கூறியாலும்… இன்று 9 ஆண்டுகளே ஆன நிலையில் அவர் கட்டிக்காத்த அணி எந்த நிலையில் உள்ளது என்பதைச் சொல்ல வார்த்தைகளே தேவையில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayalalithaa symbol womens power politics 9th anniversary leaders death commemorated


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->