32 மணி நேரத்திற்கு முன்பே இறந்த ஜெயலலிதா? குற்றவாளி சசிகலா! சிகிச்சை அளிக்கவில்லை - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த ஆணையத்தின் அறிக்கையில், சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை.  

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தும், சரிவர அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. ஆஞ்சியோ செய்ய ரிச்சர்ட் பீலே அறிவுறுத்தியும், சிகிச்சை அளிக்கப்படவில்லை.

டிச.4ம் தேதி மதியம் 3.30 மணி - 3.50க்குள் ஜெயலலிதா மரணம் என 2 பேர் சாட்சியம் அளித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துள்ளார் என்று அந்த இரு சாட்சியங்கள் சொல்லியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalaidha death case arumugasamy committee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->