நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கறிக்கடையில் கறி வெட்டி கொடுத்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனர். தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். அந்த வகையில் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நேரத்தில் கசாப்பு கடை ஒன்றில் கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கலகலப்பான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar cutting non veg in rayapuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->