திமுக செய்வது சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல்..!! திமுகவை பஞ்சர் செய்த ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் "தமிழகத்தில் மட்டும் தான் திமுகவினர் மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசுவார்கள். ஆனால் டெல்லிக்கு சென்று விட்டாள் மத்திய பாஜக அரசிடம் அய்யா.. அம்மா.. தாயே.. என்று கெஞ்சுகிறார்கள். திமுகவின் 39 எம்.பிக்களும் டெல்லி சென்று பிச்சை எடுக்கிறார்கள். மத்திய பாஜக அரசின் அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக திமுக கூட்டணி அமையும்" என பேசி இருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் இருந்து பல்வேறு கண்டனங்களும் எழுந்தன. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக துடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்

மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் "தமிழகத்தில் அதிமுகவை தலைமையாக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமையும். திமுக தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி அமைக்க துடித்துக் கொண்டிருக்கிறது. திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசை கழட்டி விட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். 

டெல்லியில் கண்கூட பார்த்ததையே முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியுள்ளார். உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு உறவு வைத்துக் கொள்வதில் திமுகவைப் போன்று ஒரு சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியலை வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாது. இந்தியாவில் இத்தகைய அரசியலை திமுக மட்டுமே செய்யும்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar criticized DMK is doing opportunistic chameleon politics


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->