பத்துக்கட்சி பண்ருட்டி.. நடிப்பின் நாயகன் ஓ.பி.எஸ் .. பஞ்ச் கொடுத்த அதிமுக ஜெயகுமார்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இனி பாஜகவுடன் எந்த தேர்தலிலும் கூட்டணியும் இல்லை என முடிவெடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் நிர்வாகிகளுடன் பாஜக உடனான கூட்டணி குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் "அண்ணா பற்றி பேசியதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை. ஏன் 4 நாட்களுக்கு பிறகு இதை கையில் எடுத்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை சொன்னது தான் இவர்கள் பாஜகவை எதிர்க்க காரணம். .

ஜெயலலிதா, அண்ணாவை பற்றி பேசியது குறித்து இவர்களுக்கு கவலையில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் தலைவரிடம் நம்பகதன்மை என்பது இருக்க வேண்டும்" எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சித்தது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை 'its a fact' என அண்ணாமலையின் கருத்தை நியாயப்படுத்துவதை போல் பேசி இருந்தார். இந்த விவகாரம் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது என்ஸ் சமுக வலைதளத்தில் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "பத்துக்கட்சி பண்ருட்டி ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார்.அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன். தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம்" என ஜெயக்குமார் கண்டனம் பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar condemns panruti Ramachandran and OPS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->