விஜய்க்கு ஜவாஹிருல்லா அறிவுரை!இலவச பஸ் பயணம், உரிமைத் தொகையை விஜய் தொடரவேண்டும்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு விஜய் அவர்களுக்கு மனிதநேயத்தையும் சமூக நீதியையும் விரும்பும் மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் அளித்துள்ள இந்தப் பொறுப்பு சாதாரண அரசியல் வெற்றியல்ல என்றும், அது மக்களின் நம்பிக்கைகளையும்  எதிர்பார்ப்புகளையும் தாங்கிய ஒரு பெரிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசு அந்த நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், சமூக நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பள்ளிக் கல்வி மேம்பாடு, மருத்துவ சேவைகள் விரிவாக்கம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நல்லாட்சித் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லும் பொறுப்பு புதிய அரசுக்கு இருப்பதாகவும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மாநில வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நலனே முக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தமிழகம் சமூக நீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்தும் மாநிலமாக தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, விஜய் தலைமையிலான புதிய அரசு தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஜவாஹிருல்லா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jawahirullah advice to Vijay Vijay should continue with free bus travel and royalty payments


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->