ஜல்லிக்கட்டு: தமிழக ஆளுநர் போட்ட அதிரடி உத்தரவு.! அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் முறையே 14.01.2021, 15.01.2021 மற்றும் 16.01.2021 ஆகிய நாட்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடு பிடி வீரர்களுக்கான பதிவும், காளைகளுக்கான பதிவும் மற்றும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படவுள்ள காளைகளின் உரிமையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ தகுதி / RT - PCR பரிசோதனை ஆகியன கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது. 

மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதிவின் போது ஆதார் அட்டை மற்றும் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். 

மேற்கண்ட இடங்கள் தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையங்களில் RT - PCR பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்கும் மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம். 

பார்வையாளர்கள்/ மாடு பிடி வீரர்கள்/ காளைகளின் உரிமையாளர்கள்/ உதவியாளர்கள்/ அலுவலர்கள்/ விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியினை கடைபிடித்தும், அரசின் நிலையான வழிகாட்டுவிதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு" மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.த.அன்பழகன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது, "விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 15-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஆளுநர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jalikattu governor order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->